துாய்மை பணியாளர்களுக்கு காய்கறி வினியோகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

துாய்மை பணியாளர்களுக்கு காய்கறி வினியோகம்

Added : மே 20, 2020
Share

கோவை:கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம், 15,20,21வது வார்டுகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு, 'நேர்டு சொசைட்டி' சார்பில் காய்கறி வழங்கும் நிகழ்ச்சி, வடவள்ளி பி.என்.புதுார் சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் நடந்தது.சுகாதார அலுவலர் திருமால் தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர் முருகன் முன்னிலை வகித்தார். 'நேர்டு சொசைட்டி' இயக்குனர் காமராஜ், துாய்மை பணியாளர்களுக்கு காய்கறி வழங்கினார்.ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் செல்வக்குமார், சுகாதாரப் பணி மேற்பார்வையாளர்கள் ரமேஷ்குமார், கிருஷ்ணன், முத்துசாமி, சமூக ஆர்வலர்கள் நாகேந்திரன், ராகவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X