பொது செய்தி

தமிழ்நாடு

மரப்பட்டை உரித்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

Added : மே 20, 2020
Share
Advertisement

மேட்டுப்பாளையம்:வனப்பகுதியில் உள்ள வேல மரத்தின் பட்டைகளை உரித்தவருக்கு, வனத்துறையினர் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.மேட்டுப்பாளையம் வனச்சரகம், சுண்டபட்டி பீட், நெல்லித்துறை காப்பு காட்டில், நந்தவனபுதூர் செல்வம், 45, என்பவர் வனப்பகுதியில் உள்ள வேல மரத்தின் பட்டைகளை உரித்து எடுத்து வந்துள்ளார். ரோந்து சென்ற வனவர் ஸ்ரீராம், வனக்காப்பாளர் விஜயகுமார், வனக்காவலர் சடையன் ஆகியோர் இது குறித்து அறிந்தனர். மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில், மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ், செல்வத்திற்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X