பொது செய்தி

தமிழ்நாடு

ஏழைகளுக்கு உதவுவதில் ரஜினி ரசிகர் மன்றத்தினர் வித்தியாசம்

Added : மே 20, 2020
Share
Advertisement
 ஏழைகளுக்கு உதவுவதில்  ரஜினி ரசிகர் மன்றத்தினர் வித்தியாசம்

கோவை:பழங்குடி கிராம மக்களுக்கு ரஜினி ரசிகர் மன்றத்தினர், வித்தியாசமான முறையில் சமூக இடைவெளி பின்பற்றி, அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கினர்.கோவை ரொட்டிக்கவுண்டன் புதூர் பகுதியில் வசிக்கும், மலசர் பழங்குடியின மக்கள், உணவு பொருட்கள் இன்றி தவித்து வந்தனர். இதையறிந்த கோவை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தினர், அந்த கிராம மக்கள், 56 பேருக்கு அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கினர்.தனி மனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், கிராமத்தின் ஓரிடத்தில் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருட்களை, அட்டைப்பெட்டியில் தனியாக பிரித்து வைத்தனர். கிராம மக்கள் ஒவ்வொருவரும், தனித்தனியாக வந்து பொருட்களை எடுத்து சென்றனர்.கோவை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற இணைச்செயலாளர் சண்முகம் கூறுகையில், ''இப்போது உணவு பொருட்கள் வழங்கி இருக்கிறோம். அடுத்து இந்த கிராம மக்களுக்கு, தேவையான அடிப்படை வசதிகளை, செய்ய இருக்கிறோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X