கரடுமுரடாக மாறிய ரோடு

Added : மே 20, 2020
Share
Advertisement
 கரடுமுரடாக மாறிய ரோடு

அன்னூர்:அன்னூர் அவிநாசி ரோட்டில், சோமனூர் பிரிவிலிருந்து, அன்னூர் சொக்கம்பாளையம் ரோட்டில், இணையும் ஒன்றரை கி.மீ., தொலைவுக்கு, சாலை அமைத்தால், அவினாசி ரோடு வழியாக வருபவர்கள், அன்னூர் நகருக்குள் செல்லாமல், கோவை ரோட்டுக்கு செல்லலாம்.பல ஆண்டுகளாக மக்கள் இதை கோரி வந்தனர். நபார்டு திட்டத்தில், இந்த சாலை அமைக்க, 70 லட்ச ரூபாய் கடந்த டிசம்பரில் ஒதுக்கப்பட்டது. ஜனவரியில் பணி துவங்கியது. மண் சாலையில் ஜல்லி கற்களை பரப்பி, இரண்டரை மாதங்கள் ஆகிவிட்டது. அதன் பிறகு எந்த வேலையும் நடக்கவில்லை. ஜல்லி கற்கள் பரப்பப்பட்ட சாலையில், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சறுக்கி விழுகின்றனர்.'அதிகாரிகள் முடங்கிக் கிடக்கின்ற இந்த சாலை பணியை, விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X