பொது செய்தி

தமிழ்நாடு

பருவ மழையை எதிர்கொள்ள தயாராகுங்கள்! அதிகாரிகளுக்கு கமிஷனர் அறிவுறுத்தல்

Added : மே 20, 2020
Share
Advertisement

கோவை:தென்மேற்கு பருவ மழையை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடு கூட்டம், கோவை மாநகராட்சி அலுவலகத்தில், கமிஷனர் ஷ்ரவன்குமார் தலைமையில் நேற்று நடந்தது; துணை கமிஷனர் பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார்.'கொரோனா' வைரஸ் பரவல் தடுப்பு பணிகளையும், கிருமி நாசினி தெளிப்பதையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மழை காரணமாக, மரங்கள் பெயர்ந்து விழுந்தால், உடனடியாக அவற்றை அகற்றி, போக்குவரத்தை சீரமைக்க வேண்டும். தேவையான மர அறுவை இயந்திரங்கள், ஊழியர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.நொய்யல் ஆற்றில் தங்கு தடையின்றி தண்ணீர் செல்வதற்கு ஏற்ப, வழித்தடங்களை துார்வார வேண்டும்; மழை நீர் வடிகாலில் அடைப்பு இருந்தால், நீக்க வேண்டும். தாழ்வான பகுதிகள் எங்கெங்கு இருக்கிறது என கண்டறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.குடியிருப்புக்குள் தண்ணீர் செல்லாமல் தடுக்க, தேவையான மணல் மூட்டைகளை தயார் செய்து வைத்திருக்க வேண்டும். அந்தந்த வார்டு உதவி/ இளம் பொறியாளர்கள் உஷாராக இருக்க வேண்டும் என, கமிஷனர் ஷ்ரவன்குமார் அறிவுறுத்தினார்.கூட்டத்தில், நகர பொறியாளர் லட்சுமணன், நகர் நல அலுவலர் சந்தோஷ்குமார், மண்டல உதவி கமிஷனர்கள் செந்தில் அரசன், மகேஷ் கனகராஜ், ரவி, நிர்வாக பொறியாளர்கள் சரவணக்குமார், ஞானவேல், சசிப்பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X