மாஸ்க் இன்றி படையெடுக்கும் நோயாளிகள், உறவினர்களால் அச்சம்| Dinamalar

தமிழ்நாடு

மாஸ்க் இன்றி படையெடுக்கும் நோயாளிகள், உறவினர்களால் அச்சம்

Updated : மே 20, 2020 | Added : மே 20, 2020 | கருத்துகள் (1)
Share
மதுரை :மதுரை அரசு மருத்துவமனைக்கு மாஸ்க் இன்றி நோயாளிகள், உறவினர்கள் படையெடுப்பதால் கொரோனா பீதி தொற்றியுள்ளது.தினமும் 8 ஆயிரம் நோயாளிகள் வரை சிகிச்சை பெறும் இம்மருத்துவமனை, ஊரடங்கு, கொரோனா அச்சத்தால் வெறிச்சோடியது. வழக்கமான நாட்களில் 2,850 படுக்கைகளும் நிரம்பிவிடும். ஆனால்ஊரடங்கில் உள்நோயாளிகளின் எண்ணிக்கை 500 ஆக குறைந்தது. தற்போது படிப்படியாக ஊரடங்கு
மாஸ்க் இன்றி படையெடுக்கும் நோயாளிகள், உறவினர்களால் அச்சம்

மதுரை :மதுரை அரசு மருத்துவமனைக்கு மாஸ்க் இன்றி நோயாளிகள், உறவினர்கள் படையெடுப்பதால் கொரோனா பீதி தொற்றியுள்ளது.

தினமும் 8 ஆயிரம் நோயாளிகள் வரை சிகிச்சை பெறும் இம்மருத்துவமனை, ஊரடங்கு, கொரோனா அச்சத்தால் வெறிச்சோடியது. வழக்கமான நாட்களில் 2,850 படுக்கைகளும் நிரம்பிவிடும். ஆனால்ஊரடங்கில் உள்நோயாளிகளின் எண்ணிக்கை 500 ஆக குறைந்தது.

தற்போது படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்படுவதால் மீண்டும் நோயாளிகள் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக மதுக்கடைகளைதிறந்ததால் விபத்து, அடிதடியில் காயம்பட்டு வருவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.நோயாளியுடன் 2 முதல் 20 பேர் வரை வருகின்றனர். இவர்களில் பலரும் மாஸ்க் அணியாமல் அஜாக்கிரதையாக இருக்கின்றனர். இதனால் மருத்துவமனைக்குள் கொரோனா பரவும் வாய்ப்புள்ளதால் டாக்டர், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிவது கட்டாயம் என அரசு உத்தரவிட்டும் பலரும் மதிக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டீன் சங்குமணி கூறுகையில், ''அரசு மருத்துவமனை வளாகத்தில் மாஸ்க் கட்டாயம். இது அணிபவருக்கும், அடுத்தவர்களுக்கும் நல்லது. இதை கண்காணிக்க மருத்துவமனையில் கமிட்டி அமைத்துள்ளோம். மாஸ்க் இன்றி வருவோருக்கு மூன்றடுக்கு மாஸ்க் வழங்குகிறோம். சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறது. 10 இடங்களில் சானிடைசர் வசதி, 5 இடங்களில் கைகழுவ வசதி செய்துள்ளோம். நோயாளிகளுடன் தேவையின்றி உறவினர்கள் வருவதை தவிர்க்க வேண்டும்''
என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X