பொது செய்தி

தமிழ்நாடு

தட்டச்சு பயிலகங்கள் திறக்க அனுமதிக்கப்படுமா?

Added : மே 20, 2020
Share
Advertisement

சென்னை : மூடப்பட்டுள்ள தட்டச்சு பயிலகங்களை திறக்க அனுமதி அளிக்கும்படி, தமிழ்நாடு தட்டச்சு- கணினி பள்ளிகள் சங்கம், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

சங்கத்தின் தலைவர் செந்தில், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:தமிழகத்தில், 3,500க்கும் மேற்பட்ட, அரசு அங்கீகாரம் பெற்ற, தட்டச்சு பயிலகங்கள் இயங்கி வருகின்றன; ஊரடங்கு காரணமாக, மார்ச், 18 முதல் மூடப்பட்டுள்ளன. தட்டச்சு பயிலகங்களில், ஒருபோதும் மாணவர்கள் தேக்கம் அடைவதில்லை. பயிற்சி மையங்களை போல, ஆயிரக்கணக்கான மாணவர்கள், ஒரே நேரத்தில் படிக்கும் நிலை இல்லை. ஒவ்வொரு மாணவருக்கும், ஒரு மணி நேரம் மட்டுமே ஒதுக்கப்படும்.

மாணவர்கள் கூட்டமாக பேசுவதோ, கலந்துரையாடவோ, வாய்ப்பு இல்லை.ஒரு மணி நேரத்தில், குறைந்தது, 10 அல்லது, 15 மாணவர்களே பயிற்சி பெறுவர். ஒரு தட்டச்சு இயந்திரத்திற்கும், மற்றொரு இயந்திரத்திற்கும், 1 மீட்டர் இடைவெளி ஏற்கனவே உள்ளது. அதை அதிகப்படுத்தவும், தயாராக உள்ளோம். தற்போது, 75 சதவீதத்திற்கு மேலான தட்டச்சு பயிலகங்கள், வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றன. எவ்வித வருமானமும் இல்லாமல், மூன்று மாத வாடகை, மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, அன்றாட வாழ்க்கை நடத்தவே சிரமப்படும் நிலை உள்ளது. எனவே, தமிழகத்தில் உள்ள, அனைத்து அரசு அங்கீகாரம் பெற்ற தட்டச்சு பயிலகங்களையும், அரசின் சட்ட விதிகளுக்குட்பட்டு, மீண்டும் திறந்திட அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X