சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மளிகை பொருள் மொத்த விற்பனை கொத்தவால்சாவடி மார்க்கெட் மூடல்

Added : மே 20, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை: கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், கொத்தவால்சாவடியில், உணவு தானிய மொத்த விற்பனை கடைகளை, ஒரு வாரத்திற்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை, கொத்தவால்சாவடியில், 200க்கும் மேற்பட்ட, உணவு தானிய மொத்த விற்பனை கடைகள் உள்ளன. இங்கு, தொற்று பரவல் அதிகமானதை தொடர்ந்து, இந்த கடைகளை, ஒரு வாரத்திற்கு மூட வேண்டும் என, போலீசார் உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து, கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால், 24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படும் கொத்தவால்சாவடி, தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.

இது குறித்து, கொத்தவால்சாவடி மொத்த விலை பருப்பு வியாபாரி, செந்தில்குமார் கூறியதாவது:கொத்தவால்சாவடியில், வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், ஒன்றரை மாதமாக, சரக்கு வாகனங்களுக்கு அனுமதி தரப்படவில்லை. இதனால், கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களை இறக்க முடியவில்லை. கையிருப்பில் இருந்த பொருட்களையே விற்று வந்தோம்.தற்போது, வைரஸ் மேலும் தீவிரமடைந்துள்ளதால், ஒரு வாரத்திற்கு கடைகளை திறக்க வேண்டாம் என, போலீசார் கூறியுள்ளனர்.

இதனால், உணவு தானியங்கள் விலை அதிகரிக்கலாம். தற்போது, மொத்த விலையில், உளுந்தம் பருப்பு, கிலோ, 95 - 105 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கடலை பருப்பு, கிலோ, 52 ரூபாயாக உள்ளது. சர்க்கரை, கிலோ, 37 ரூபாயாக உள்ளது. பதுக்கல் அதிகரித்தால், உணவு தானிய வகைகளின் விலை அதிகரிக்கக் கூடும். எனவே, மளிகை விலை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
20-மே-202008:39:44 IST Report Abuse
Bhaskaran Erkanave siramapadum nadutharamakkal innum kashtapadanumkirathuthaan athigaarikalin seeriya nokkam polum
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X