பொது செய்தி

இந்தியா

செய்தி சில வரிகளில்...

Added : மே 20, 2020
Share
Advertisement

'மாஜி' அதிகாரிகள் மீது வழக்குபுதுடில்லி: 'சர்வே ஆப் இந்தியா' எனப்படும் நில அளவைத் துறையில், 2002ல் நடந்த தேர்வின்போது, மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இந்த மோசடியில்,தேர்ச்சி பெற்றவர்கள் தோல்வி அடைந்தவர்களாகவும், தோல்வி அடைந்தவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக அப்போது, இந்தத் துறையில் பணியாற்றிய, ராணுவ பிரிகேடியர்கள் இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்கள், ராணுவ மேஜர் ஜெனரல்களாக ஓய்வு பெற்றவர்கள்.ஆபாச குழுக்கள்: நீதிமன்றம் கேள்விபுதுடில்லி: சமீபத்தில் டில்லியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் இணைந்து, சமூக வலைதளத்தில், ஆபாசப் படங்களை பகிர்ந்து கொள்ளும் குழுவை உருவாக்கினர். அதில், சில மாணவியரின் படங்கள் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டன.இது போன்ற மோசடியில் இருந்து சிறுமியரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து பதிலளிக்கும்படி, மத்திய அரசின் உள்துறை, தகவல் தொழில்நுட்பம், நிதித் துறை மற்றும் 'பேஸ்புக், கூகுள், டுவிட்டர்' உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


புலி அடித்து பெண் பலிசந்திரபுர்: மஹாராஷ்டிர மாநிலம் சந்திரபுர் மாவட்டத்தில், புலிகள் நடமாட்டம் உள்ள வனப் பகுதிக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறி, வனத்துக்குள் சென்ற பெண்ணை, புலி அடித்துக் கொன்றுள்ளது. சந்திரபுர் மாவட்டத்தில், இந்தாண்டு மட்டும், புலி தாக்கி, 11 பேர் உயிரிழந்துள்ளனர்.'வீட்டிலேயே கொண்டாடுங்க' சஹாரன்புர்: உத்தர பிரதேச மாநிலம் சஹாரன்புரில் உள்ள, தருல் உலோம் தியோபந்த் என்ற முஸ்லிம் அமைப்பு விடுத்துள்ள செய்தியில், 'இந்தாண்டு, ஈத் பண்டிகையை, அனைவரும் வீட்டிலேயே கொண்டாடுங்கள்.

கொரோனா அச்சத்தால், ஊரடங்கு உள்ளதால், மசூதிக்கு யாரும் செல்ல வேண்டாம்' என, குறிப்பிடப்பட்டுள்ளது. ஈத், வரும், 24 அல்லது 25ல் கொண்டாடப்பட உள்ளது.எஸ்.ஐ., சுட்டுக் கொலைஹிசார்: ஹரியானா மாநிலம், ஹிசார் அருகே, ரயில்வே பாதுகாப்புப் படை, எஸ்.ஐ., முனிஷ் சர்மா, 36, சுட்டுக் கொல்லப்பட்டார். ரயில் தண்டவாளத்தில், மூன்று பேர் அமர்ந்திருந்தனர். அவர்களில் ஒருவரை அவர் பிடித்துள்ளார்; மற்ற இருவரும் தப்பியோடி விட்டனர். அவர் பிடித்த நபர், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால், எஸ்.ஐ.,யை சுட்டுள்ளார். அந்த நபரை, அங்குள்ளவர்கள் பிடித்துள்ளனர்.

பள்ளிகளுக்கு உத்தரவுபுதுடில்லி: 'மாணவர்களிடம் இருந்து, கல்வி கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். அதுவும், கடந்தாண்டு, அக்., மாதத்தில் உயர்த்தப்பட்ட கட்டணத்துக்கு முந்தைய கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும்' என, டில்லியில் உள்ள இரண்டு பள்ளிகளுக்கு, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆசிரியர்களுக்கு முழு சம்பளம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X