பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா விடுமுறை முடிஞ்சாச்சு... சிகை அலங்கரிக்க வேளை வந்தாச்சு!

Added : மே 20, 2020
Share
Advertisement
 கொரோனா விடுமுறை முடிஞ்சாச்சு... சிகை அலங்கரிக்க வேளை வந்தாச்சு!

அன்னூர்:தமிழக கிராமங்களில், சலூன் திறக்க, அரசு அனுமதித்ததால், முடி திருத்துவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.அன்னூர் பேரூராட்சியில் 54 நாட்கள் காத்திருந்த பலரும், முடி திருத்த ஒட்டர்பாளையம், கரியாம்பாளையம் ஊராட்சிகளுக்கு சென்றனர்.ஒட்டர்பாளையம் ஊராட்சி, ஜீவா நகரில் உள்ள சலூன் உரிமையாளர் ஆனந்தன் கூறுகையில், "54 நாட்கள், வருமானம் இல்லாமல் தவித்து வந்தோம். அரசு அளித்த இலவச ரேஷன் பொருளும், ஆயிரம் ரூபாயும் போதவில்லை. மகள் மளிகை கடைக்கு, பகுதி நேர வேலைக்கு சென்றதால், ஓரளவுக்கு சமாளிக்க முடிந்தது.தற்போது கடை திறக்கப்படாத, இரண்டு மாதங்களுக்கும் சேர்ந்து, கடை வாடகை, மின் கட்டணம் செலுத்த, கூடுதலாக பாடுபட வேண்டும். கிருமிநாசினி, கையுறை, என கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளதால், லாபம் குறைகிறது. அரசு இதை கவனத்தில் கொண்டு, எங்களுக்கு கூடுதல் நிவாரணம் தர வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X