மொபைல் போன் பறிக்க முயன்ற இருவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மொபைல் போன் பறிக்க முயன்ற இருவர் கைது

Added : மே 20, 2020
Share

கோவை:மொபைல் போன் பறிக்க முயன்ற இருவர், கைது செய்யப்பட்டனர்.கோவை, ம.ந.க., வீதியை சேர்ந்த அரூப், அங்குள்ள அடுக்குமாடி முன் நின்று கொண்டிருந்தார். அப்போது, கோவைப்புதுார் அறிவொளி நகரை சேர்ந்த மதனகுமார்,24, காந்திபார்க்கை சேர்ந்த கணேஷ்பாரதி,24, ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி, அரூப்பிடமிருந்து மொபைல் போனை பறிக்க முயன்றதால் கூச்சலிட்டார். அந்த வழியாக சென்றவர்கள், இருவரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். வெரைட்டிஹால் போலீசார் இருவரையும், கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X