பொது செய்தி

தமிழ்நாடு

சாலையோர கடைகளின் தலைவிதி: திறக்க அரசு அளிக்குமா அனுமதி

Added : மே 20, 2020
Share
Advertisement

கோவை:கோவையில், சாலையோர, நடைபாதை மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள், கடை நடத்த அனுமதி கேட்டு, மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் நேற்று முறையிட்டனர்.கோவை மாநகராட்சி பகுதியில், 6,169 சாலையோர வியாபாரிகள் உள்ளனர். 'கொரோனா' வைரஸ் பரவல் காரணமாக, ஊரடங்கு அமலில் இருப்பதால், கடந்த, மார்ச் முதல், கடை நடத்த முடியாத நிலையில் இருக்கின்றனர். தமிழக அரசு தரப்பில், நிவாரணமாக ரூ.1,000 வழங்கப்பட்டது.தற்போது படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருவதால், நிபந்தனைகளுக்கு உட்பட்டு, கடைகள் நடத்த, அனுமதி அளிக்க வேண்டுமென, கோயமுத்துார் மாவட்ட சாலையோர மற்றும் நடைபாதை வியாபாரிகள் நலச்சங்கத்தினர், கலெக்டர் ராஜாமணி, மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஆகியோரை நேற்று சந்தித்து, முறையிட்டனர்.'கொரோனா' நோய் பரவல் கட்டுக்குள் இருக்கிறதே தவிர, இன்னும் முழுமையாக அழிக்கப்படவில்லை. அதனால், நோய் தடுப்புக்கான நிபந்தனைகளை, தொடர்ந்து பின்பற்ற முடியுமா என, வியாபாரிகளிடம் மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசித்தனர். இது குறித்து, ஓரிரு நாட்களில் முடிவு வெளியாகும் என தெரிகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X