பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் கொரோனா நிவாரணம் தாராளம்

Added : மே 20, 2020
Share
Advertisement

மதுரை, மே 20-
மதுரையில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு பல்வேறு தரப்பினரும் நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்.
l பாரதம் சேவா டிரஸ்ட், ஏ.பி.வி.பி., மாணவர் அமைப்பு சார்பில் பேராசிரியர் பரமசிவன் நினைவு மருத்துவ முகாம், வாழ்வாதார பொருட்கள், கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. டாக்டர்கள் குப்புசாமி, சண்முகசுந்தரம், அறங்காவலர் குமரேஷ், ஏ.பி.வி.பி., முன்னாள் தலைவர் கதலி நரசிங்கபெருமாள், மாநில இணை செயலாளர் கோபி, பொருளாளர் சிவக்குமார், நகர் செயலாளர் வெங்கட் பங்கேற்றனர்.
l செல்லையா நகர் கூடல்நகர் குடியிருப்போர் சங்கம் சார்பில்
அப்பகுதி சுகாதார பணியாளர் களுக்கு அரிசி, சமையல் எண்ணெய் வழங்கப்பட்டது. சங்க நிர்வாகிகள் தியாகராஜன், சத்யா செல்வம், ரவீந்திரன் ஒருங்கிணைத்தனர்.
திருப்பரங்குன்றம்
l ஹார்விபட்டி உதவி கரங்கள் அறக்கட்டளை சார்பில் கருவேலம்பட்டியில் மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோருக்கு அரிசி, மளிகை பொருட்களை வி.ஏ.ஓ., பெரியசாமி வழங்கினார். நிர்வாகிகள் சுப்பிரமணியன், முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
l சரஸ்வதி நாராயணன் கல்லுாரி பொருளியல் துறை தலைவர் ஜெயக்குமார் நெல்லையப்பபுரம் பகுதியில் அரிசி வழங்கினார்.
l திருப்பரங்குன்றம் ஐயப்பன் தாங்கல் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ராஜேந்திரன் சார்பில் 25 பேருக்கு அரிசி, மளிகை பொருட்கள், காய்கறி வழங்கப்பட்டது. நிர்வாகிகள் மோகன், சச்சிதானந்தம், ராமச்சந்திரன், இஸ்மாயில், மேகலா கலந்து கொண்டனர்.
l ஹார்விபட்டி ஓமியோபதி டாக்டர் பார்கவி சார்பில் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை ஏணி பொது நல அமைப்பினர் வீடு வீடாக வழங்கினர்.
உசிலம்பட்டி
l நக்கலப்பட்டி ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு அ.தி.மு.க., சார்பில் எம்.எல்.எ., நீதிபதி, நகர் செயலாளர் பூமாராஜா, மாவட்ட கவுன்சிலர் சுதாகரன் மற்றும்
கட்சியினர் நிவாரண உதவியாக அரிசி வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X