சாயல்குடியில் குடியிருப்பு பகுதிக்குள் புகும் கழிவு நீர்

Added : மே 20, 2020
Share
Advertisement
 சாயல்குடியில் குடியிருப்பு பகுதிக்குள் புகும் கழிவு நீர்

சாயல்குடி:சாயல்குடி-அருப்புக்கோட்டை சாலை, ராமநாதபுரம்-- துாத்துக்குடி சாலையின் இருபுறங்களிலும் செல்லும் கழிவு நீர் வாறுகால் வழியாக நேரடியாக குடியிருப்பு பகுதிகளுக்குள் கழிவு நீர் விடப்படும் அவலம் 5 ஆண்டுகளாக தொடர்கிறது.

சாயல்குடி பேரூராட்சி 7வது வார்டு மாதவன் நகரில் செல்லும் கழிவு நீர் அருந்ததியர் ஊரணிக்குள் கலப்பதால் ஊரணி நீரை பயன்படுத்த முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். புரட்சிகர மார்க்சிஸ்ட் கம்யூ., தாலுகா செயலாளர் முருகேசன் கூறியதாவது:கிழக்கு கடற்கரை சாலையின் இருபக்கங்களிலும் உள்ள கழிவுநீர் வாறுகால் சிறிய பாலத்தின் வழியாக சென்று மாதவன் நகர் குடியிருப்பு பகுதியில் தேங்குகிறது.

மழை நீரும், கழிவு,நீரும் பெருக்கெடுத்து பாய்வதால், துர்நாற்றமும், நோய் தொற்றும் ஏற்படுகிறது. கொசுப்பண்ணை உருவாகி பகலிலும், இரவிலும் கடிக்கிறது.தெருக்களில் குடியிருப்போர் மலேரியா, டெங்கு, விஷக்காய்ச்சலுக்கு ஆளாகும் அபாயம்உள்ளது.

சாயல்குடி போலீஸ் செக்போஸ்ட் அருகே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு துார்வாரப்பட்ட கழிவு நீர் செல்லும் வாறுகாலுக்கு கட்டுமான இணைப்பை ஏற்படுத்தினால் மட்டுமே இப்பிரச்சனைக்கு தீர்வு காணலாம், என்றார்.எனவே சாயல்குடி பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X