பொது செய்தி

தமிழ்நாடு

3 லட்சம் நாற்றுக்கள் ஊரடங்கால் தேக்கம்

Added : மே 20, 2020
Share
Advertisement

உசிலம்பட்டி, உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லுாரில் கொரோனா ஊரடங்கால் கத்தரி, தக்காளி, மிளகாய் உள்ளிட்ட 3 லட்சம் நாற்றுக்கள் விற்பனையின்றி தேங்கியுள்ளன.
பெருங்காமநல்லுார் பன்னீர்செல்வம் 52, பசுமை குடில் அமைத்து இந்த நாற்றுக்கள் உற்பத்தி செய்து வினியோகம் செய்து வருகிறார். இந்தாண்டு சித்திரை பட்டத்திற்காக கத்தரி, தக்காளி, மிளகாய் போன்றவற்றின் 3 லட்சம்நாற்றுக்களை தயார் செய்தார். அவை விற்பனையின்றி தேங்கியுள்ளன.
அவர் கூறியதாவது:
நாற்றுகளை 30 நாட்களுக்குள் நட வேண்டும்.நாற்றுகளை ரகம் வாரியாக தலா 50 காசுக்கு வாங்கி செல்வர். ஊரடங்கால் போக்குவரத்து இன்றி வெளியூர்களுக்கு நாற்றுகளை அனுப்ப முடியவில்லை. விவசாயிகளும் வந்து வாங்க வழியில்லை,
என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X