மானாவாரியில் எள் சாகுபடி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மானாவாரியில் எள் சாகுபடி

Added : மே 20, 2020
Share

பேரையூர், பேரையூர் தாலுகாவில் சில நாட்களாக பெய்யும்கோடை மழையை தொடர்ந்து மானாவாரியில் எள் நடவு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.தாலுகாவில் சிறுதானியம், எண்ணெய் வித்து பயிர்கள் அதிக பரப்பில் சாகுபடி செய்யப்படுகின்றன. சில நாட்களாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. மானாவரி எள் சாகுபடிக்காக விவசாயிகள் நிலத்தை சீர் செய்து எள் விதைப்பை துவங்கியுள்ளனர்.விவசாயிகள் கூறியதாவது:விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன் விதை நேர்த்தி செய்ய வேண்டும். நிலத்தில் போதிய ஈரம் இருப்பதால் தற்போது எள் விதைக்கிறோம். எள்ளுக்கு அதிக நீர் தேவையில்லை. வறட்சியைதாங்கி வளரும். மகசூலை 90 நாட்களில் பெறலாம், என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X