சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்

Added : மே 20, 2020
Share
Advertisement

பூங்காவில் தற்கொலை

மதுரை: சக்கிமங்கலம் தென்றல் நகர் சூர்யா 19. பரோட்டா மாஸ்டர். ஊரடங்கால் வேலையின்றி இருந்ததால் வருமானமின்றி சிரமப்பட்டார். விரக்தியில் வீட்டை விட்டு வெளியேறியவர், விரகனுார் மதகு அணை பூங்காவில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிலைமான் போலீசார் விசாரிக்கின்றனர்.

பி.எஸ்.என்.எல்.,லில் திருட்டு

மதுரை: தல்லாகுளம் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் ஊரடங்கால் செயல்படவில்லை. இதை பயன்படுத்தி உள்ளே புகுந்த மர்மநபர், ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 47 மின் பேட்டரிகளை திருடிச்சென்றார். போலீசார் விசாரிக்கின்றனர்.விவசாயி கொலை மேலுார்: பழையசுக்காம்பட்டி விவசாயிகள் பிரபு 24, சிவக்குமார் 45. நேற்று முன்தினம் இரவு சூரக்குண்டு மாத்தி கண்மாயில் மதுஅருந்தினர். அப்போது பிரபுவின் தங்க செயினை சிவக்குமார் பறிக்க முயல தகராறு ஏற்பட்டது. ஆத்தரமுற்ற பிரபு அரிவாளால் வெட்டியதில் சிவக்குமார் இறந்தார்.பிரபு கைது செய்யப்பட்டார்.

பால் வியாபாரிக்கு கத்திக்குத்து

அவனியாபுரம்: துக்காராம் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி 50. பால் வியாபாரி. அதே பகுதியை சேர்ந்த கார்த்தி, மணிகண்டன் உட்பட 3 பேர் ஒரே டூவீலரில் தினமும் இரவில் அதிவேகமாக சென்றுள்ளனர். இதை கண்டித்த கருப்பசாமியின் வயிற்றில் கத்தியால் குத்தியும், கம்புகளால் தாக்கியும் தப்பினர்.போலீசார் விசாரிக்கின்றனர்.கஞ்சா: இருவர் கைதுஉத்தப்பநாயக்கனுார்: எஸ்.ஐ., லிங்கசாமி மற்றும் போலீசார் வத்தலக்குண்டு ரோட்டில் நடத்திய வாகன சோதனையில்நெல்லை சிவரஞ்சித் 24, சிமியோன் 22, ஆகியோர் வத்தலக்குண்டு வந்து 1.25 கிலோ கஞ்சா வாங்கிச் செல்வது தெரிந்தது. இருவரையும் கைது செய்தனர்.போலீஸ்காரர் பலிஉசிலம்பட்டி: மெய்யணம்பட்டி மகேஸ்வரன் 35. மதுரை ரயில்வே போலீஸ்காரர். நேற்று காலை 8:45 மணிக்கு ஆண்டிபட்டி மலைக்கணவாய் பகுதி தோட்டத்திற்கு சென்று விட்டு டூவீலரில் ஹெல்மெட் அணிந்து ஊர் திரும்பினார். உசிலம்பட்டி பகுதி இறக்கத்தில் எதிரே தேனியை நோக்கிச் சென்ற கார் மோதி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

கொலையில் 2 பேர் கைது

சமயநல்லுார்: மதுரை எஸ்.எஸ்.காலனி தனியார் காப்பீடு நிறுவன ஏஜன்ட் சிவக்குமார் 52. கட்டப்புளிநகர் அருகே மே 17ல் அடித்து கொலை செய்யப்பட்டு பாதி எரிந்த நிலையில் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக பெத்தனியாபுரம் விக்னேஷ் 26, திண்டுக்கல் கணேஷ்பாபு 23, கைது செய்யப்பட்டனர். இவர்கள் சிவக்குமாரிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கி பங்கு சந்தையில் முதலீடு செய்துநஷ்டமடைந்தனர். கடனை திருப்பிக்கேட்ட சிவக்குமாரை கொலை செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X