தமிழ்நாடு

இந்தாண்டு கோடை காலத்தை சமாளிக்க முடியும்

Added : மே 20, 2020
Share
Advertisement
வானம் பார்த்த பூமியானராமநாதபுரத்தில் வறட்சியால் ஆண்டு தோறும் கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக இருக்கும். வட கிழக்கு பருவ மழையில் போதுமான அளவு மழை பொழிவு இருந்தது. தற்போது கோடையிலும் மழை பொழிவு இருப்பதால்ராமநாதபுரம் நகரை சுற்றி உள்ள ஊரணிகளில் ஓரளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.இதனால் கிணறுகள் மற்றும் போர்வெல்களில் தண்ணீர் உள்ள நிலையில், மக்கள்
இந்தாண்டு கோடை காலத்தை சமாளிக்க முடியும்

வானம் பார்த்த பூமியானராமநாதபுரத்தில் வறட்சியால் ஆண்டு தோறும் கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக இருக்கும். வட கிழக்கு பருவ மழையில் போதுமான அளவு மழை பொழிவு இருந்தது. தற்போது கோடையிலும் மழை பொழிவு இருப்பதால்ராமநாதபுரம் நகரை சுற்றி உள்ள ஊரணிகளில் ஓரளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.

இதனால் கிணறுகள் மற்றும் போர்வெல்களில் தண்ணீர் உள்ள நிலையில், மக்கள் குளிப்பதற்கும், வீட்டு உபயோகத்திற்கும் ஊரணி தண்ணீரை பயன்படுத்துகின்றனர். அதே நேரத்தில் நிலத்தடி நீரும் பாதிப்பு இல்லாமல் இருப்பதால் போர்வெல்களில் போதுமான அளவு தண்ணீர் உள்ளது.ராமநாதபுரத்தில் இந்தாண்டு கோடை காலத்தில் பெரிய அளவில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது. மக்களும் தேவையின்றி குடங்களுடன் அலைந்து திரியும் நிலையும் இல்லை.

தற்போது காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில்தட்டுப்பாடு இன்றி குடிநீர் கிடைப்பதால் மாவட்ட நிர்வாகம் பிரச்னையின்றி உள்ளது. இந்தாண்டு கோடை காலத்தை ஊரணியில் உள்ள நீரால் சமாளிக்க முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X