பொது செய்தி

தமிழ்நாடு

காட்டு வழியாக நடைபயணம்: கூடலூர் வந்த பழங்குடியினர்

Added : மே 20, 2020
Share
Advertisement

கூடலுார்:'கூடலுார் ஓடகொல்லி பழங்குடி கிராமத்தை சேர்ந்த ஒன்பது பேர், புளியாம்பாறை பழங்குடி கிராமத்தை சேர்ந்த மூன்று பேர், காமராஜ் நகரை சேர்ந்த ஒருவர்,' என, 13 பழங்குடி இளைஞர்கள் கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு உல்லள்ளி பகுதியில் இஞ்சி தோட்டத்தில் பணியாற்றி வந்தனர்.ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், அங்கிருந்து, பந்திப்பூர் மற்றும் முதுமலை புலிகள் காப்பகம் காட்டு வழி யாக நடந்து, கூடலுார் பகுதிக்கு வந்தனர். அவர்கள், ஓடக்கொல்லி கிராமத்தில், தனி குடிசையில் தனியாக தங்க வைக்கப்பட்டனர்.அவர்களை, கூடலுார் ஆர்.டி.ஓ., ராஜ்குமார், தாசில்தார் சங்கீதாராணி மற்றும் மருத்துவ குழுவினர் சந்தித்தனர். மருத்துவ குழுவினர் அவர்களின் உடல்நிலையை பரிசோதனை செய்து, கொரோனா பரிசோதனைக்காக, மாதிரிகளை எடுத்து சென்றனர்.ஆர்.டி.ஓ., ராஜ்குமார் கூறுகையில்,''கர்நாடகாவில் இருந்து காட்டு வழியாக நடந்து, கூடலுார் வந்து சேர்ந்தவர்களின் ரத்த, சளி மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன. ஓடகொல்லியை சேர்ந்த ஒன்பது பேர் காஞ்சிகொல்லி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியிலும்: மற்ற நான்கு பேர் அவர்கள் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டு தனித்திருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X