பொது செய்தி

தமிழ்நாடு

பேரூராட்சியில் குப்பை சேகரிப்பு

Added : மே 20, 2020
Share
Advertisement

மஞ்சூர்:கீழ் குந்தா பேரூராட்சி பகுதிகளில வீடுதோறும்துாய்மை பணியாளர் வந்து, குப்பை சேகரிக்கும் பணி துவங்கியது.நீலகிரியில் சுகாதாரத்தை பேணிக்காக்க, மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொது இடங்களில் சுகாதாரத்தை காக்கும் வகையில், உள்ளாட்சி அமைப்புகளின் கீழ், நகர் மற்றும் கிராமப்புறங்களில் வைக்கப்பட்ட குப்பை தொட்டிகள் அனைத்தும் அகற்றப்பட்டன.இந்த திட்டத்தின் படி, 'மட்கும் குப்பை; மட்காத குப்பைகளை வீடுகளில் தரம் பிரித்து வைக்கப்பட வேண்டும். துாய்மை பணியாளர்கள் வீடு தேடி வந்து சேகரித்து, லாரிகள் மூலம் அந்தந்த பகுதியில் உள்ள குப்பை கிடங்குக்கு கொண்டு சென்று, திடக்கழிவு மேலாண்மை மூலம் உரம் தயாரிக்க வேண்டும்,'என, உத்தரவிடப்பட்டுள்ளது.முதற்கட்டமாக, இத்திட்டம் நகராட்சி பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது.தற்போது, மாவட்டத்தில், 11 பேரூராட்சிகளிலும் இதனை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பேரூராட்சிகளின் கீழ், 1.20 லட்சம் குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன. இப்பகுதிகளை சுகாதாரமாகவும் துாய்மையாக வைக்க, மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.இதற்கென, துாய்மை பணியாளர்களுக்கு உரிய பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம் தலைமையில், குப்பை மேலாண்மை திட்டம் பேரூராட்சி பகுதிகளில், பேரூராட்சி செயல் அலுவலர் மேற்பார்வையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக, கீழ்குந்தா பேரூராட்சி பகுதியில், 15 வார்டுகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.செயல் அலுவலர் ரவி கூறுகையில்,''மட்கும் குப்பை, மட்காத குப்பை தரம் பிரித்து வாங்குவது குறித்து கிராமங்கள்தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வெளியே குப்பையை கொட்ட கூடாது. வீட்டில் தரம் பிரித்து குப்பையை வைத்தால், வாரத்திற்கு இரண்டு முறை துாய்மை பணியாளர்கள் வீட்டுக்கு வந்து வாங்கி செல்வர்.இதற்கு மக்கள்ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X