மின் வாரியத்தினர் ஆர்ப்பாட்டம்: மத்திய அரசுக்கு கண்டனம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின் வாரியத்தினர் ஆர்ப்பாட்டம்: மத்திய அரசுக்கு கண்டனம்

Added : மே 20, 2020
Share
குன்னுார்:மாநில மின் வாரியங்களை, தனியார்மயமாக்கும், மத்திய அரசின் முயற்சியை கண்டித்து, நீலகிரியில் மின் வாரிய அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், குன்னுார் மவுன்ட் ரோடு பிரிவு அலுவலகம் முன், பொறியாளர் சங்க தாலுகா செயலாளர் சிவசங்கரன் தலைமையில், தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்க வட்ட பொருளாளர் பிச்சையா, மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொறுப்பாளர் அபுபக்கர்,

குன்னுார்:மாநில மின் வாரியங்களை, தனியார்மயமாக்கும், மத்திய அரசின் முயற்சியை கண்டித்து, நீலகிரியில் மின் வாரிய அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், குன்னுார் மவுன்ட் ரோடு பிரிவு அலுவலகம் முன், பொறியாளர் சங்க தாலுகா செயலாளர் சிவசங்கரன் தலைமையில், தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்க வட்ட பொருளாளர் பிச்சையா, மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொறுப்பாளர் அபுபக்கர், பொறியாளர் சங்க பொறுப்பாளர் ஜான்சன் உட்பட பலர் பங்கேற்றனர்.இதே போல, ஊட்டியில், பொறியாளர் சங்க மண்டல செயலாளர் கமல்குமார் தலைமையில், சங்க பொறுப்பாளர் சந்தீப், மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்ட செயலாளர் சண்முகம் ஆகியோர், கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஐக்கிய சங்க ஊட்டி கோட்ட செயலாளர் சுந்தர மூர்த்தி நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X