கோத்தகிரி:கோத்தகிரி தனியார் எஸ்டேட் குடியிருப்பில், திருச்சியில் இருந்து வந்தவர் தனிமையில் வைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கோத்தகிரியில் உள்ள தனியார் எஸ்டேட்டில் பணிபுரியும் பெண் தொழிலாளி, தனது உறவினரின் பிரசவம் பார்ப்பதற்கு, இரண்டு மாதங்களுக்கு முன்பு, திருச்சி சிரங்கனுாருக்கு சென்று, இ-பாஸ் பெற்று கோத்தகிரிக்கு வந்துள்ளார். அவர், எஸ்டேட் குடியிருப்பில் தங்குவதற்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெண் தொழிலாளியின் உறவினர் ஒருவர், கோத்தகிரி காளவாய் பகுதியில் தனக்கு சொந்தமான வீட்டில் தங்க வைக்க ஒத்து கொண்டுள்ளார்.அதன்படி, பெண் தொழிலாளி அந்த வீட்டுக்கு சென்றபோது, அங்குள்ள பெண்கள் உட்பட, 100க்கும் மேற்பட்டோர், எதிர்ப்பு தெரிவித்து, வருவாய் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.வி.ஏ.ஓ., உதவியாளர் அறிவாகரன் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களை சமரசம் செய்தார். இருப்பினும், மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.இதை தொடர்ந்து, தாசில்தார் மோகனா ஆலோசனைப்படி, பெண் தொழிலாளியை மீண்டும் தனியார் எஸ்டேட் குடியிருப்புக்கு அழைத்துச்சென்று, தனிமையில் வைத்தனர். இந்த சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE