பொது செய்தி

தமிழ்நாடு

மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் ரூ.17 கோடி கடன் : மாவட்டத்தில் 26 ஆயிரம் பயனாளிகள் பயன்

Added : மே 20, 2020
Share
Advertisement

ஊட்டி:கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேலை இழந்த, 26 ஆயிரம் பேருக்கு, 17 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகளை, மத்திய கூட்டுறவு வங்கி வழங்கியது.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச், 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால், டாக்சி மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள், கூலி தொழிலாளர்கள், சவர தொழிலாளர்கள்; பணிமனை பணியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.அவர்களுக்கு உதவ, மாவட்ட நிர்வாகம் மற்றும் கூட்டுறவுத்துறை நடவடிக்கை மேற்கொண்டது. இந்நிலையில், ஊட்டியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில், மாவட்டத்தில் உள்ள, 26 ஆயிரத்து 640 பயனாளிகளுக்கு, 17 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்தார். மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வினோத், மேலாண்மை இயக்குனர் வசந்தா முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில், மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த, 24 ஆயிரத்து 730 பேருக்கு, 12 கோடியே 36 லட்சம்; 500 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் சிறு வணிக கடன்; பணிமனை உரிமையாளர்கள், 500 பேருக்கு 1.25 கோடி ரூபாய்; டாக்சி ஓட்டுனர்கள், 500 பேருக்கு 1.25 கோடி; ஓட்டுனர்களுக்கு சிறுவணிக கடனாக, 200 பேருக்கு 50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. முடி திருத்துவோருக்கு சிறு வணிக கடனாக, 110 பயனாளிகளுக்கு 56 லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டது. இதனால், அவர்களின் பொருளாதார பிரச்னைக்கு ஓரளவு தீர்வு கிடைத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X