தொழிலாளர்களுக்கான ரயில்களை அதிகரிக்க வேண்டும்

Added : மே 20, 2020
Share
Advertisement

புதுடில்லி : 'தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கு வசதியாக, ரயில்வே துறையுடன் இணைந்து, அதிக அளவில் சிறப்பு ரயில்களை இயக்க, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் முன் வர வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள், கொரோனா மற்றும் ஊரடங்கால் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளனர். இவர்கள், தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கு போதிய போக்குவரத்து வசதி இல்லாததால், நடைபயணமாகவே செல்கின்றனர். இவர்களில் சிலர் விபத்தில் சிக்கி இறந்தனர். அதிருப்திஇதையடுத்து, தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கு வசதியாக, சிறப்பு ரயில்களை மத்திய அரசுஇயக்கி வருகிறது. இதற்கான, 85 சதவீத கட்டணத்தை மத்திய அரசும், மீதமுள்ள தொகையை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் ஏற்றுள்ளன.

இந்நிலையில், ரயில்களை அதிகமாக இயக்குவது, கொரோனா பரவலுக்கு வழி வகுத்து விடும் என, சில மாநில அரசுகள் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:ஊரடங்கு காரணமாக நாட்டில் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள், வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்கள், தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல விரும்புகின்றனர்.

எனவே, மாநில அரசுகள், ரயில்வே துறையுடன் இணைந்து, தொழிலாளர்களுக்காக மேலும் அதிக சிறப்பு ரயில்களை இயக்க முன் வர வேண்டும். தொழிலாளர்களுக்கு தேவையான தங்குமிடம், உணவு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். அவர்களை ரயில்களில் அனுப்பும்போது, பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். குழந்தைகள், வயதானோர், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பரிசோதனை அதேபோல், தொழிலாளர்களை பஸ்களில் அனுப்பி வைக்கும்போதும், போதிய வசதிகள் செய்து தர வேண்டும். அவர்கள் சென்று சேரும் இடங்களில் முகாம்களை அமைத்து, பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

சமூக விலகல் நடவடிக்கையை கட்டாயம் பின்பற்ற வேண்டும். மேலும், தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் சிறப்பு ரயில்கள், கடைசியாக எந்த மாநிலத்துக்குச் சென்று சேருகிறதோ, அந்த மாநில அரசின் ஒப்புதலை பெற வேண்டிய அவசியம், ரயில் புறப்படும் மாநில அரசுகளுக்கு தேவையில்லை. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.பீஹாரில் 9 பேர் பலிமேற்கு வங்கத்தில் பணியாற்றிய சில தொழிலாளர்கள், ஒரு லாரியில், தங்கள் சொந்த மாநிலமான பீஹாருக்கு புறப்பட்டனர். நேற்று காலை, பீஹாரின் பஹல்பூர் மாவட்டம் அருகே வந்தபோது, திடீரென அந்த லாரி கவிழ்ந்தது. இதில், ஒன்பது தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர்; மேலும் சிலர் படுகாயம் அடைந்தனர். லாரியின் டிரைவரும், கிளீனரும் தப்பி ஓடி விட்டனர்.

இறந்த தொழிலாளர்கள் அனைவரும், பீஹாரின் சம்பரான் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. எதிரில் வந்த பஸ் மீது மோதாமல் தவிர்ப்பதற்காக டிரைவர் முயற்சித்த போது, லாரி கவிழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர். பஸ்சில் வந்த சிலரும் இந்த விபத்தில் படு காயம் அடைந்தனர். இதேபோல், மஹாராஷ்டிரா மாநிலம், யவத்மால் மாவட்டத்தில், தொழிலாளர்களை ஏற்றி வந்த பஸ், லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், நான்கு தொழிலாளர்கள் இறந்தனர்; 22 பேர் காயம் அடைந்தனர். உத்தர பிரதேச மாநிலம், பண்டா மாவட்டத்தில், தொழிலாளர்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததில், மூன்று பேர் பலியாயினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X