பொது செய்தி

தமிழ்நாடு

குழப்பத்தில் கல்வித்துறை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

Added : மே 20, 2020
Share
Advertisement

மதுரை:'பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அவசர கதியில் முடிவுகள் எடுப்பதன் மூலம் கல்வித்துறை குழப்பத்தில் உள்ளது தெரிகிறது' என தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

மாநில பொதுச்செயலாளர் சங்கர் கூறியது: தமிழகத்தில் 9.45 லட்சம் மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வை எழுதவுள்ளனர். இதுவரை தேர்வு தேதி மூன்று முறை மாற்றப் பட்டுள்ளது. இது அதிகாரிகள் அவசர கதியில் அடிக்கடி எடுக்கும் குழப்பமான முடிவுகளின் வெளிப் பாடாக உள்ளது.

தேர்வு எழுதும் 80 சதவீதம் மாணவர்களின் குடும்பம் 50 நாட்களுக்கும் மேல் ஊரடங்கால் வறுமையில் சிக்கியுள்ளன. தற்போது அவர்கள் தேர்வு எழுதும் மனநிலையில் இல்லை. மீறி தேர்வு நடத்தினால் 'ஆப்சென்ட்' அதிகரிக்கும். நோய் கட்டுக்குள் வந்த பின் மாணவர்களுக்கு இரண்டு வாரம் நினைவூட்டல், ஆயத்தம் மற்றும் புத்தாக்க பயிற்சிகள் அளித்த பின் ஜூலையில் தேர்வு நடத்த வேண்டும். அவசரம் வேண்டாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜாக்டோ-ஜியோ ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகேசன் கூறுகையில், 'கொரோனா ஊரடங்கால் பத்தாம் வகுப்பு தேர்வு இருமுறை தள்ளி வைக்கப்பட்டது. ஜூன் 1 முதல் 12 வரை தேர்வு நடக்கும் என அமைச்சர் அறிவித்ததற்கு ஜாக்டோ- ஜியோ எதிர்ப்பு தெரிவித்தது.தற்போது ஜூன் 15ல் பத்தாம் வகுப்பு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி திறந்த பின் மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்த 10 நாட்கள் வாய்ப்பளித்து பத்தாம் வகுப்பு தேர்வு நடத்த வேண்டும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X