சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரையில் கோஷ்டி மோதல் முன்னாள் எம்.எல்.ஏ., மீது வழக்கு

Added : மே 20, 2020
Share
Advertisement
மதுரை:மதுரையில் கோஷ்டி மோதலில் ஈடுபட்டதாக அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., பொன்னம்பலம் 72, உட்பட 37 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி அருகே கருவனுார் கண்மாயில் நேற்றுமுன்தினம் பகலில் சிலர் மது குடித்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட, முத்துபாண்டி, முத் தமிழ் முருகன் ஆகியோர் சமரசம் செய்தனர். அப்போது சரத்குமார் என்பவர்

மதுரை:மதுரையில் கோஷ்டி மோதலில் ஈடுபட்டதாக அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., பொன்னம்பலம் 72, உட்பட 37 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி அருகே கருவனுார் கண்மாயில் நேற்றுமுன்தினம் பகலில் சிலர் மது குடித்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட, முத்துபாண்டி, முத் தமிழ் முருகன் ஆகியோர் சமரசம் செய்தனர். அப்போது சரத்குமார் என்பவர் வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை காணவில்லை.

இதுகுறித்து அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., பொன்னம்பலம் மகன் தில்லையம்பலத்திடம் கூறினார்.முத்துபாண்டி உள்ளிட்டோரிடம் அவர் கேட்க, கோஷ்டி மோதலானது. கற்கள், கம்பி, கட்டைகளை கொண்டு தாக்கியதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. வீடுகள் சேதப்படுத்தப் பட்டன. இருதரப்பிலும் புகார் செய்யப்பட்டது. பொன்னம்பலம், இரு மகன்கள் உட்பட இருதரப்பையும் சேர்ந்த 37 பேர் மீது எம்.சத்திரப்பட்டி இன்ஸ்பெக்டர் உமாதேவி நோய் பரவல் தடுப்புச்சட்டம் உட்பட பல பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தார்.

சிலர் கைது செய்யப்பட்டனர். பொன்னம்பலம் 2001 - 06 வரை அப்போதைய சமயநல்லுார் (தனி) தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தவர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X