தமிழ்நாடு

பரிந்துரை! பஸ்கள் இயக்க போக்குவரத்துக் கழகத்திற்கு கலெக்டர்...பயணச்சீட்டுடன் அரசு அலுவலர்கள் பணிக்கு வர ஏற்பாடு

Added : மே 20, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், அரசு ஊழியர்கள் வந்து செல்வதற்கு அரசு பஸ்கள் இயக்க விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக மண்டல மேலாளருக்கு, கலெக்டர் கிரண் குராலா பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தில், கொரோனா தடுப்பு பணிகளில் சுகாதார துறை, காவல் துறை, உள்ளாட்சி துறை மற்றும் வருவாய் துறை உட்பட சில முக்கிய அரசு துறைகள் மட்டுமே செயல்பட்டன. மற்ற அரசு அலுவலகங்கள் குறைந்தளவு ஊழியர்களுடன் செயல்பட்டது.இந்நிலையில், நேற்று முன்தினம் முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. அரசு பணியாளர்கள் அலுவலகம் வந்து செல்ல தனியாக பஸ் வசதி வசதி செய்து தரப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் தங்களது அலுவலகத்திற்கு வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனையொட்டி, மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் எவ்வித தொய்வும் இன்றி அரசு பணிகள் நடைபெறும் பொருட்டு, 238 அரசு ஊழியர்களுக்கு பயணச்சீட்டு அடிப்படையில் அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக மண்டல மேலாளருக்கு, கலெக்டர் கிரண்குராலா பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார்.அதில், காலை 8:00 மணிக்கு விழுப்புரத்திலிருந்து உளுந்துார்பேட்டை வழியாக கள்ளக்குறிச்சிக்கு 2 பஸ்கள், திருக்கோவிலுாரிலிருந்து சங்கராபுரம் வழியாக சின்னசேலத்திற்கு 2 பஸ்கள், கள்ளக்குறிச்சியிலிருந்து சங்கராபுரம் வழியாக திருக்கோவிலுாருக்கு 2 பஸ்கள், கள்ளக்குறிச்சியிலிருந்து தியாகதுருகம் - உளுந்துார்பேட்டை வழியாக விழுப்புரத்திற்கு ஒரு பஸ் என மொத்தம் 7 பஸ்கள் இயக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல், இவர்கள் மாலை பணிமுடிந்து வீட்டிற்கு செல்லும் வகையில் மாலை 6:00 மணிக்கு இந்த பஸ்கள் அனைத்தும் மீண்டும் அதே வழித்தடத்தில் இயக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் முக கவசம், கையுறை கண்டிப்பாக அணிதல் வேண்டும். பஸ்சில் அரசு ஊழியர்கள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். அதற்கான அடையாள அட்டையை கண்டக்டரிடம் காண்பித்து பயண சீட்டிற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.சொந்த காரணத்திற்காக குடும்ப உறுப்பினர்களை அழைத்துச் செல்லக் கூடாது. பஸ் புறப்படும் நேரத்தை கணக்கிட்டு தங்களது ஸ்டாப்பில் ஏறிக் கொள்ளலாம்.

பஸ்சில் அரசு ஊழியர்களுக்கு மட்டும் என்ற வாசகம் ஒட்டப்பட வேண்டும். 3 பேர் அமரக்கூடிய இருக்கையில் இருவரும், இருவர் அமரக்கூடிய இருக்கையில் ஒருவர் மட்டுமே அமர வேண்டும். பஸ்சில் வழங்கப்படும் கிருமி நாசினியை ஊழியர்கள் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.உள்ளூர் அரசு ஊழியர்களும் பஸ் வசதியை பயன்படுத்தி கொள்ளலாம். சுகாதாரமான முறையில் பயணம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்தக்கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கலெக்டர் பரிந்துரையின் படி ஊழியர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப இன்று முதல் பஸ்கள் இயக்கப்படும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X