அரசியல் செய்தி

தமிழ்நாடு

மத்திய மருத்துவ குழு முதல்வருக்கு பாராட்டு

Added : மே 20, 2020
Share
Advertisement

சென்னை : கொரோனா நோய் பரவலை தடுக்க, தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்காக, மத்திய மருத்துவ குழுவினர், முதல்வருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சார்பில், சென்னை தேசிய தொற்று நோய் நிறுவன இயக்குனரும், கொரோனா தேசிய பணிக் குழு முன்னணி உறுப்பினருமான, டாக்டர் மனோஜ் முரேக்கர், துணை இயக்குனர், பிரதீப் கவுர் ஆகியோர் நேற்று, தலைமை செயலகத்தில், முதல்வர் இ.பி.எஸ்.,சை சந்தித்து பேசினர்.அப்போது, கொரோனா நோய் பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சை தொடர்பாக, தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்காக, முதல்வருக்கு பாராட்டு தெரிவித்தனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலர் சண்முகம், சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X