மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டில் மரம் முறிந்து விழுந்ததில் மூன்று கூரை வீடுகள் சேதமடைந்தன.மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் ஏழுமலை, 42; குப்புசாமி, 60; நடராஜன், 58; ஆகியோரின் கூரை வீடு மீது அருகில் இருந்த மரம் முறிந்து விழுந்ததில் சேதமானது. மேலும், பொருவளூரில் ஆரோக்கியமேரி, 35; என்பவரது பசு மாடு இறந்தது. வி.ஏ.ஓ., கோவிந்தராஜன் விசாரிக்கிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE