மாஜி அமைச்சர் சிபாரிசு போலி டாக்டர் விடுவிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'மாஜி' அமைச்சர் சிபாரிசு போலி டாக்டர் விடுவிப்பு

Added : மே 20, 2020 | கருத்துகள் (1)
Share
ஓசூர் : ஓசூர் அருகே சிக்கிய போலி டாக்டரை, அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சரின் சிபாரிசால் போலீசார் விடுவித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே, ஹிமாகிரி லே - அவுட்டைச் சேர்ந்தவர் கார்த்திக், 29; இவர், மனைவியின் வயிற்று வலிக்கு, பாகலுார் சாலையில் உள்ள, 'வேல்' என்ற தனியார் மெடிக்கலில், நேற்று மாத்திரை வாங்கினார். அது, மார்ச் மாதத்துடன் காலாவதியானது தெரிந்தது. அவரது

ஓசூர் : ஓசூர் அருகே சிக்கிய போலி டாக்டரை, அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சரின் சிபாரிசால் போலீசார் விடுவித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே, ஹிமாகிரி லே - அவுட்டைச் சேர்ந்தவர் கார்த்திக், 29; இவர், மனைவியின் வயிற்று வலிக்கு, பாகலுார் சாலையில் உள்ள, 'வேல்' என்ற தனியார் மெடிக்கலில், நேற்று மாத்திரை வாங்கினார். அது, மார்ச் மாதத்துடன் காலாவதியானது தெரிந்தது. அவரது புகாரின்படி, சோதனை நடத்திய, ஓசூர் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் பூபதி, மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் ராஜிவ்காந்தி ஆகியோர், மெடிக்கலுக்கு, 'சீல்' வைத்தனர். மேலும், பிளஸ் 2 முடித்து, அங்கு பணியாற்றி வந்த முரளிரெட்டி, 40, என்பவர், நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்தது தெரிந்தது. அவரை, ஹட்கோ போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.

ஆனால், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, போலீசாரிடம் சிபாரிசுக்கு சென்றதால், அவர் மீது வழக்கு பதியாமல் விடுவித்தனர். கடந்த 13ம் தேதி, தளியில் போலி டாக்டர் ஒருவரை பிடித்து, ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். முன்னாள் அமைச்சர் முனுசாமியின் ஆதரவாளர் ஒருவர் நேரடியாக பேசியதால், வழக்கு பதியாமல், அவரை விடுவித்தனர்.புகார் செய்யும் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர்களும், வேறு வழியின்றி வழக்கை வாபஸ் பெற்று செல்கின்றனர். போலி டாக்டர்களை விடுவிக்க, ஆளுங்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் சிபாரிசுக்கு வருவது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X