இருதரப்பு தகராறு இருவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இருதரப்பு தகராறு இருவர் கைது

Added : மே 20, 2020
Share

விழுப்புரம்: மணல் எடுத்த தகராறில் 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து இருவரை கைது செய்தனர்.விழுப்புரம் அடுத்த முதலியார்குப்பத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் மகன் தமிழ்மாறன், 19; இவர், அதே பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், 36; என்பவரின் நிலத்திற்கு அருகில் உள்ள ஓடையில் மணல் எடுத்தார். இதனால், ஏற்பட்ட தகராறில் சிவக்குமார், அவரது தந்தை சுந்தர்ராஜ், 57; ஆகியோரும், நாகராஜ், 49; அவரது மகன்கள் முத்தமிழ் பிரதாப், 24; தமிழ்மாறன் ஆகியோரும் ஒருவரை ஒருவர் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.இது குறித்து இரு தரப்பு புகார்களின் பேரில், சிவக்குமார், நாகராஜ் உள்ளிட்ட 5 பேர் மீது வளவனுார் போலீசார் வழக்குப்பதிந்து, முத்தமிழ் பிரதாப், தமிழ்மாறன் ஆகியஇருவரையும் கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X