சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்

Added : மே 20, 2020
Share
Advertisement

விழுப்புரம்; பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூ., கட்சி சார்பில் கறுப்பு கொடிஆர்ப்பாட்டம் நடந்தது.விழுப்புரம் மாவட்ட இந்திய கம்யூ., கட்சி அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். முகையூர் ஒன்றிய செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். விவசாய கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.அப்போது, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை கட்சி மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாவட்டக்குழு உறுப்பினர் வீரசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.திருவெண்ணெய்நல்லுார்திருவெண்ணெய்நல்லுாரில் நடந்த ஆர்பாட்டத்திற்கு, இந்திய கம்யூ., ஒன்றிய செயலாளர் நாராயணன் தலைமை தாங்கினார். விவசாய சங்க மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, ஒன்றிய குழு உறுப்பினர் சேகர், கிளைச் செயலாளர்கள் மனோகர், கேசவன், ஆறுமுகம், ஏசுமணி பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் அனைத்து நபர்களையும் ஈடுபடுத்த வேண்டும்.விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X