பொது செய்தி

தமிழ்நாடு

காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் நாளை முதல் 3 நாட்கள் கடையடைப்பு 

Added : மே 20, 2020
Share
Advertisement

திண்டிவனம்; திண்டிவனத்தில், நகர காய்கறி வியாபாரிகள் சங்கம் சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி நாளை 21ம் தேதி முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் கடையடைப்பு நடத்துகின்றனர்.அரசின் உத்தரவு மூலம், ஊரடங்கு தளர்த்தப்பட்டதால், திண்டிவனம் நகராட்சியில் நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தவிர மற்ற இடங்களிலுள்ள கடைகள் அனைத்தும் வழக்கம் போல செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், திண்டிவனம் நகராட்சி பழைய பஸ் நிலையம், அரசு மருத்துவமனை எதிரே உள்ள மைதானம் ஆகிய இடங்களில் உள்ள காய்கறி கடைகள் மட்டும் அதே இடத்தில் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில், திண்டிவனம் காய்கறி வியாபாரிகள் சங்க கூட்டம் தலைவர் ஏழுமலை தலைமையில் நேற்று நடந்தது. இதில் நிர்வாகிகள் இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், நகரத்தில் மற்ற கடைகள் எல்லாம் ஏற்கனவே இருந்த இடத்திலேயே செயல்படுகிறது. ஆனால் காய்கறி கடைகள் மட்டும் மார்க்கெட் பகுதியில் இல்லாமல் ஒதுக்குப்புறமாக இரண்டு இடங்களில் செயல்படுவதால், காய்கறி வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.காய்கறி வியாபாரம் சரியாக நடப் பதில்லை என்பதால், வியாபாரிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாக திண்டிவனத்தில் காய்கறி கடைகள் அனைத்தும், நாளை 21ம் தேதி முதல் மூன்று நாட்கள் அடைப்பது. அடுத்து தொடர்ந்து நான்கு நாட்கள் திறப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, திண்டினத்திலுள்ள காய்கறி கடைகள் அனைத்தையும் நாளை 21ம் தேதி முதல் வரும் 23ம் தேதி வரை மூடுவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X