பொது செய்தி

தமிழ்நாடு

வனவிலங்கு கணக்கெடுப்பு ஆனைமலையில் ஆரம்பம்

Added : மே 20, 2020
Share
Advertisement

ஆனைமலை : பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில், வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி, நேற்று துவங்கியது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில், ஆறு வனச்சரகங்கள் உள்ளன. புலிகள் காப்பகத்தில் ஆண்டுதோறும், மழைக் காலத்துக்கு முந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு, மே மாதமும், மழை காலத்துக்கு பிந்தைய கணக்கெடுப்பு, டிச., மாதமும் நடக்கிறது.மழைக்கு முந்தைய கோடை கால கணக்கெடுப்பு நேற்று துவங்கியது. வரும், 24ம் தேதி வரை கணக்கெடுப்பு நடக்கிறது. வனத் துறையினர் கூறியதாவது:புலிகள் காப்பகம் முழுதும், 54 பீட் பகுதிகள் உள்ளன. ஒரு பீட் பகுதியில், 2 கி.மீ.,க்கு, இரண்டு நேர்கோட்டு பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

மொத்தம், 108 நேர்கோட்டு பாதைகளில் கணக்கெடுப்பு நடக்கிறது. கணக்கெடுப்பு குறித்த தகவல், மொபைல் செயலி மற்றும் படிவங்களில் பதிவு செய்யப்படுகிறது.வனவிலங்குகளின் கால் தடம், கழிவுகள், நேரடியாக பார்ப்பதை கொண்டு, தகவல் பதிவு செய்யப்படுகிறது. கணக்கெடுப்பு விபரங்கள், 25ம் தேதி, தேசிய புலிகள் ஆணையத்துக்கு அனுப்பப்படும். அதன்பின், வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்டறிய, கேமரா பொருத்தப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X