சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'இன்டர்நெட்' போனில் மிரட்டும் ரவுடி பிடிக்க முடியாமல் திணறும் போலீஸ்

Added : மே 20, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
 'இன்டர்நெட்' போனில் மிரட்டும் ரவுடி பிடிக்க முடியாமல் திணறும் போலீஸ்

வேலுார் : 'இன்டர்நெட்' போன் காலில், வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் ரவுடியை பிடிக்க முடியாமல், போலீசார் திணறி வருகின்றனர்.

வேலுார், காட்பாடி அடுத்த வன்றந்தாங்கலைச் சேர்ந்தவர் ஜானி, 35. ரவுடியான இவர் மீது, கொலை, கடத்தல், பணம் பறிப்பு, செம்மரக்கட்டை கடத்தல் போன்ற, 54 வழக்குகள் உள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு மேல், தலைமறைவாக உள்ளார்.இவரது கூட்டாளி ராஜா, 27, என்பவரை, விருதம்பட்டு போலீசார், நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ரவுடி ஜானி, தன் அடியாட்கள் மூலம், தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவது தெரிந்தது.தமிழக - ஆந்திர மாநில மலைப் பகுதியில் பதுங்கி, வேலுார், காட்பாடி, கே.வி.குப்பம், சத்துவாச்சாரியில் உள்ள தொழிலதிபர்களிடம், இன்டர்நெட் போன் காலில் மிரட்டி, பணம் பறித்து வருகிறார்.

அவர்கள் புகார் கொடுக்க பயந்து, அவர் கூறும் வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தி விடுகின்றனர். பிப்., முதல் மார்ச் வரை, 120 வியாபாரிகள், ஜானியின் மிரட்டலுக்கு பயந்து, பணம் போட்டுள்ளனர்.காட்பாடி, டி.எஸ்.பி., துரைபாண்டியன் கூறியதாவது: ரவுடி ஜானி, தன் கூட்டாளிகளிடம் இன்டர்நெட் காலில் பேசுவதால், அவர் பதுங்கியுள்ள இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. ஏதாவது துப்பு கிடைக்குமா என, தேடி வருகிறோம்.தலைமறைவாக இருந்தபடியே பணம் கேட்டு, பலரை போனில் மிரட்டி உள்ளார். அவரை எப்படியும் கைது செய்து விடுவோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pichai Tamizhan - Jeddah,சவுதி அரேபியா
22-மே-202019:10:42 IST Report Abuse
Pichai Tamizhan பங்கு எங்கெங்கே போகிறது என்பது தெரிந்தால் தான் போலீஸ் நடவடிக்கை எடுக்குமா என்பது தெரியும்.. அந்த அக்கவுண்ட் ஐ trace செய்வது அவ்வளவு கடினமா என்ன..?
Rate this:
Cancel
s.rajagopalan - chennai ,இந்தியா
22-மே-202013:38:53 IST Report Abuse
s.rajagopalan பிடிக்க முடியலே என்பது நம்ப முடியலே ....என்னவோ நடக்குது... மிரட்டினால் ஏன் சொல்லாமல் கொள்ளாமல் பணத்தை வங்கி மூலம் அனுப்புகிறார்கள் ? திருட்டு பணமாயிருக்குமோ ? ...இதெல்லாம் இப்போ சகஜமாயிடிச்சு ...
Rate this:
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
22-மே-202013:24:33 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam வங்கியின் கணக்கை முடக்க முடியாதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X