சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரட்டை சகோதரிகள் துாக்கிட்டு தற்கொலை

Added : மே 20, 2020
Share
Advertisement

வேலுார், : காட்பாடி அருகே, இரட்டை சகோதரிகள், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

வேலுார், காட்பாடி அருகே மாருதி நகரைச் சேர்ந்தவர், பாலசுப்பிரமணியன், 56. இவரது மகள்கள் பத்மபிரியா, 17, ஹரிபிரியா, 17. இரட்டை சகோதரிகளான இவர்கள், காட்பாடியில் உள்ள தனியார் பள்ளியில், பிளஸ் 1 தேர்வு எழுதியுள்ளனர். தற்போது, ஆன்லைனில், பிளஸ் 2 பாடங்களை படித்து வந்தனர். நேற்று காலை, 10:00 மணிக்கு, ஆன்லைனில் படிக்கச் செல்வதாக கூறி, வீட்டு மாடியில் உள்ள அறைக்கு சென்றனர். நீண்ட நேரமாக வராததால், அவரது தந்தை மாடிக்கு சென்று பார்த்துள்ளார்.அங்கு, இருவரும், மின் விசிறியில் துாக்கு போட்டு தற்கொலை செய்ததை பார்த்து, அதிர்ச்சி அடைந்தார். காரணம் குறித்து, காட்பாடி போலீசார், விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X