புதுச்சேரி; அம்பான் புயல் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறியது. அம்பான் என பெயரிடப்பட்டுள்ள இப்புயல், இன்று வங்கதேசத்தில் கரையை கடக்கவுள்ளது. காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், புதுச்சேரி துறைமுகத்தில் 2ம் எண்புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.சாலையில் அனல் காற்று:புயல் காரணமாக நேற்று காலை புதுச்சேரி கிராமப்புற பகுதியில் லேசான மழை பெய்து இதமான சூழல் நிலவியது. பின்பு காலை 10:00 மணிக்கு பிறகு வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கியது. பகல் நேரத்தில் வெப்பம் அதிகரித்து, சாலையில் அனல் காற்று வீசியது.கடற்கரையோர குடியிருப்பு சேதம்:புதுச்சேரி அருகில் உள்ள தமிழக பகுதியான பொம்மையார்பாளையம் கடற்கரையில், கடல் சீற்றமாக காணப்பட்டது. ராட்சத அலைகள் காரணமாக, இப்பகுதியில் கைவிடப்பட்ட இரண்டு வீடுகள் இடிந்து விழுந்தன.கடல் சீற்றம் காரணமாக, கரையோரம் இருந்த பைபர் படகுகளை மீனவர்கள் பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE