இந்தியா

கிருமி நாசினி தெளிக்க வேண்டி கரியமாணிக்கத்தில் சாலை மறியல்

Added : மே 20, 2020
Share
Advertisement

நெட்டப்பாக்கம்; கிருமி நாசினி தெளிக்க வலியுறுத்தி கரியமாணிக்கத்தில் இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.நெட்டப்பாக்கம் அடுத்த கல்மண்டபத்தில் உள்ள டயர் தொழிற்சாலையில் கல்மண்டபம், கரியமாணிக்கம், ஏரிப்பாக்கம், நத்தமேடு, பண்ட சோழநல்லுார், வடுக்குப்பம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதி இளைஞர்கள் வேலை செய்து வருகின்றனர்.இந்நிலையில் சில தினங் களுக்கு முன் கம்பெனியில் வேலை செய்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் டயர் தொழிற்சாலையை, வருவாய் துறையினர் மூடினர்.அப்போது, தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் சுற்றியுள்ள கிராமங்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. அதன்படி தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் ஏரிப்பாக்கம் உள்ளிட்ட சில கிராமங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. கரியமாணிக்கம் கிராமத்தில் கிருமி நாசினி தெளிக்கவில்லை. இதனை கண்டித்து அப்பகுதி இளைஞர்கள் நேற்று காலை நெட்டப்பாக்கம் - கல்மண்டபடம் சாலையில் மறியலில் ஈடுப்பட்டனர்.தகவலறிந்த நெட்டப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார், மறியலில் ஈடுப்பட்டவர்களிடம், தொழிற்சாலை நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனையேற்று அனைவரும் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X