இந்தியா

தொலைபேசி கட்டணம் ரூ.1 கோடி பாக்கி அரசின் தகவல் தொடர்பு துண்டிக்கும் ஆபத்து

Added : மே 20, 2020
Share
Advertisement

புதுச்சேரி; புதுச்சேரி மாநில அரசு அலுவலங்களில் தொலைபேசி கட்டணம் ரூ. 1 கோடி பாக்கி வைத்துள்ளதால், இறுதி நாளான நாளை தகவல் தொடர்பு துண்டிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.புதுச்சேரி மாநில அரசு, தலைமை செயலகம், சட்டசபை, மருத்துவமனைகள், போலீஸ் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு துறைகளிலும் பி.எஸ்.என்.எல்., தொலைபேசி இணைப்பு மற்றும் பிராட்பேண்ட் இணைப்புகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு மாதத்திற்கு ரூ. 1 கோடி வரை கட்டணம் செலுத்தப்படுகிறது.கொரோனா ஊரடங்கு காரணமாக, பல அரசு அலுவலகங்கள் தொலைபேசி மற்றம் பிராட்பேண்ட் இணைப்புக்கான கட்டணத்தை கட்ட தவறிவிட்டது. மாநில அரசு அலுவலகங்கள் ரூ. 1 கோடியும், புதுச்சேரி பல்கலைக்கழகம் ரூ.50 லட்சம் வரை பாக்கி வைத்துள்ளன. கட்டணம் செலுத்த நாளை 21ம் தேதி கடைசி நாளாகும்.நாளைக்குள் கட்டணம் செலுத்தாவிட்டால், தொலைபேசி மற்றும் பிராட்பேண்ட் இணைப்புகள் துண்டிக்கப்பட்டால், மாநில அரசின் தகவல் தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X