இந்தியா

மரம் முறிந்து விழுந்ததில் டாக்டர், செவிலியர் படுகாயம்

Added : மே 20, 2020
Share
Advertisement

புதுச்சேரி: சாலையோரம் இருந்த மரம் முறிந்து விழுந்தததில், டாக்டர் மற்றும் செவலியலர் படுகாயமடைந்தனர்.அரியாங்குப்பம், ஆர்.கே. நகரை சேர்ந்தவர் டாக்டர் செந்தில்,36; மேல்மருத்துாரில் உள்ள மருத்துவ கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மாலை 3:00 மணியளவில், பைக்கில் கோரிமேட்டில் இருந்து அரியாங்குப்பம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது, சாலையோரம் இருந்த மரத்தின் கிளை திடீரென முறிந்து, டாக்டர் செந்தில் மற்றும் ஸ்கூட்டரில் வந்த ஜிப்மர் செவலியர் அபென் ஜோபியா,23; ஆகியோர் மீது விழுந்தது.அங்கிருந்தவர்கள், மரக்கிளைகளை அகற்றி படுகாயமடைந்த டாக்டர் மற்றும் செவலியரை மீட்டு, ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து புதுச்சேரி வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X