இந்தியா

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று முதல் செயல்படும்: அமைச்சர்

Added : மே 20, 2020
Share
Advertisement

புதுச்சேரி; புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று (20ம் தேதி) முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் என வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:முதல்வரின் கோரிக்கையை ஏற்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் விவசாயிகளிடம் இருந்து 20 ஆயிரம் டன் அரசிக்கு தேவையான நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசு, இந்திய உணவு கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.அதன்படி, புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி, மதகடிப்பட்டு, கன்னியக்கோவில், கரையாம்புத்துார் காரைக்காலில் தென்னங்குடியிலும் இன்று (20ம் தேதி) முதல் ஆகஸ்ட் 31ம் தேதிவரை நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்படும்.இந்திய உணவு கழகம் வரையறுத்துள்ள விதிகளின் படி,விவசாயிகள் கொண்டு வரும் நெல் இந்தாண்டு அறுவடை செய்தவையாகும், ஈரப்பதம் 17 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். நடப்பு பருவத்தில் அறுவடை செய்தததற்கு ஆதாரமாக, உழவர் உதவியக வேளாண் அதிகாரியின் சான்று சமர்பிக்க வேண்டும்.நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருக்கும் நெல் துாற்றும் கருவி கொண்டு, விவசாயிகள்தங்கள் செலவில் துாற்றி எடுத்த பின், இந்திய உணவு கழகம் சன்னரகம் குவிண்டால் ரூ.1,835க்கும் மோட்டரகம் ரூ.1,815க்கும் கொள்முதல் செய்யப்படும். கொள்முதல் தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் இரண்டு நாளில் வரவு வைக்கப்படும்.நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிவ் பணிகளை ஒன்றிணைக்க, இந்திய உணவு கழகம் மற்றும்வேளாண் துறையின் விரிவாக்க அதிகாரிகள், களப்பணியாளர்கள் இருப்பர்கள்.விவசாயிகள் அனைவரும் கொள்முதல் நிலையத்திற்கு வரும் பொழுது அவர்களது வங்கி கணக்கு புத்தகத்தின் நகல், உழவர் உதவிய வேளாண் அதிகாரியின் நடப்பு பருவ அறுவடைக்கான சான்று மற்றும் ஆதார் அட்டையின் நகல் எடுத்து வர வேண்டும்.அதிகமான நபர்கள் ஒரே நேரத்தில் கூடுதல் மற்றும் காத்திருத்தலை தவிர்க்க,விவசாயிகள் தாங்கள் விற்பனை செய்ய உள்ள நெல்லை நேரடி கொள்முதல் மையத்தில் முன் பதிவு செய்தல் நல்லது என இந்திய உணவு கழகம் அறிவுருத்தி உள்ளது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X