வாலிபர் தற்கொலை போலீஸ் விசாரணை | Dinamalar

இந்தியா

வாலிபர் தற்கொலை போலீஸ் விசாரணை

Added : மே 20, 2020
Share

வில்லியனுார்; தந்தை சொத்து பிரித்து கொடுக்காததால் மனமுடைந்த மகன் துாக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.வில்லியனுார் அடுத்த கணுவாப்பேட்டை புதுநகரை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் பாலாஜி,30; விவசாயியான இவருக்கு 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. குழந்தை இல்லாததால் கணவன் மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டு மூன்று ஆண்டிற்கு முன் மனைவி விவாகரத்து பெற்று சென்றுவிட்டார்.இதனால், விரக்தியில் இருந்த பாலாஜி தனது தந்தையிடம் சொத்தை பிரித்து கொடுக்குமாறு கேட்டார். அவர் மறுத்துவிட்டதால் மனமுடைந்த பாலாஜி நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X