இந்தியா

புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பாதிப்பு...மருத்துவமனையில் 12 பேருக்கு சிகிச்சை

Added : மே 20, 2020
Share
Advertisement
 புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பாதிப்பு...மருத்துவமனையில் 12 பேருக்கு சிகிச்சை

புதுச்சேரி பகுதி குச்சிப்பாளையம், செல்லிப்பட்டு, அரும்பார்த்தபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, கதிர்காமத்தில் அமைந்துள்ள கோவிட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில், அரும்பார்த்தபுரத்தை சேர்ந்தவரின் மனைவி, மகள், அவருடன் பணிபுரிந்த பண்டசோழநல்லுாரை சேர்ந்தவர் ஆகிய 3 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு, தொடர் சிகிச்சையில் உள்ளனர்.காரைக்கால் பகுதியில் வழக்கு ஒன்றில் தொடர்புடையவரை கைது செய்தபோது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்ததையடுத்து, அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், துபாய் சென்று திரும்பிய காரைக்காலை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.புதுச்சேரி, காரைக்காலில் மொத்தம் 8 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். காரைக்கால் நபருக்கு முதல் முறையாக எடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்று இல்லை என முடிவு வந்தது. இரண்டாவது முறையாக உமிழ்நீர் மாதிரி எடுத்து பரிசோதிக்கப்பட்டதில் குணமடைந்தது தெரிய வந்தது. அவர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அரும்பார்த்தபுரம் நபருடன் தொடர்பில் இருந்த வில்லியனுார் புறவழிச்சாலையை சேர்ந்த 36 வயது நபருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டு, கதிர்காமம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதற்கிடையில், கேரள மாநிலம் கண்ணுார் அரசு மருத்துவக் கல்லுாரியில் முத்தியால்பேட்டை கென்னடி நகரை சேர்ந்த வாலிபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரி கொரோனா பட்டியலில் இந்த வாலிபரும் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், கடந்த 17ம் தேதியன்று, துபாயில் இருந்து மாகி திரும்பிய 61 வயது முதியவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அவர் மாகியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குவைத்தில் இருந்து சென்னை திரும்பிய புதுச்சேரியை சேர்ந்த 2 பேருக்கு, சென்னையில் சுகாதாரத் துறையினர் நேற்று மாலை மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவர்களை புதுச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ள தமிழக சுகாதாரத் துறையினர், புதுச்சேரி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த இருவரும், புதுச்சேரி பட்டியலில் சேர்ந்துள்ளனர்.

இதன் எதிரொலியாக, புதுச்சேரி கொரோனா பாதிப்பு பட்டியல் வேகமாக உயர துவங்கி உள்ளது.புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 10 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர்; ஒருவர் இறந்து விட்டார்.தற்போதைய நிலவரப்படி, புதுச்சேரியில் கோவிட் மருத்துவமனையில் 9 பேரும் (குவைத்தில் இருந்து திரும்பிய இருவரை சேர்த்து), காரைக்கால், மாகி மருத்துவமனைகளில் தலா ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கண்ணுார் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் புதுச்சேரி வாலிபர் சிகிச்சையில் உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X