திருக்கனுார்;திருக்கனுார் எல்லையில் கைப்பற்றிய மதுபாட்டில்களை ஸ்டேஷனில் ஒப்படைக்காத வழக்கில் சிக்கிய மூன்று போலீசார் கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மாநில எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திருக்கனுார் எல்லையில், 16ம் தேதி இரவு ஐ.ஆர்.பி.என் பிரசன்னா, வில்லியனுார் போக்குவரத்து போலீஸ்காரர் செல்வம் பணியில் இருந்தனர். விவசாய நிலத்தில் சிலர் மது அருந்துவதாக தகவல் வந்தது.போலீசாரை பார்த்ததும் மது அருந்தியவர்கள் பாட்டில்களை போட்டுவிட்டு தப்பினர். அங்கிருந்த 15 மதுபாட்டில்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அவற்றை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கவில்லை என்று உயர் அதிகாரிகளுக்கு தெரியவந்தது.இதையடுத்து சீனியர் எஸ்.பி., ராகுல் அல்வால் உத்தரவின் பேரில் ஐ.ஆர்.பி.என்.பிரசன்னா, கோகுல், மணிகண்டன் போக்குவரத்து போலீஸ்காரர்செல்வம் ஆகியோர் மீது திருக்கனுார் போலீசார் 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து நான்கு பேரும் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.இந்நிலையில் ஐ.ஆர்.பி.என். மணிகண்டன், கோகுல், போலீஸ்காரர் செல்வம் ஆகிய மூன்று பேரை பிடித்து போலீசார், அவர்களை கொரோனா பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கதிர்காமம் கோவிட் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஐ.ஆர்.பி.என். பிரசன்னாவை தேடிவருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE