சிறுமி பாலியல் பலாத்காரம் ; செய்தவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமி பாலியல் பலாத்காரம் ; செய்தவர் கைது

Added : மே 20, 2020
Share

தஞ்சாவூர் : சிறுமியை திருமணம்செய்து, பாலியல் பலாத்காரம் செய்தவரை, 'போக்சோ' சட்டத்தில்போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர், மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பால்ராஜ், 43. வேலைக்கு ஆட்கள் பிடித்து கொடுக்கும் ஏஜன்ட். இவர், வறுமையில் வாடிய, திருச்சி, திருவெறும்பூரைச் சேர்ந்த, 14 வயது சிறுமியை, 2019ல் திருமணம் செய்துள்ளார்.சிறுமிக்கு, திருமணத்தில் விருப்பம் இல்லாத நிலையில், சேர்ந்து வாழ மறுத்துள்ளார். அவரை அடித்து துன்புறுத்தி, கொலை செய்து விடுவதாக மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.மேலும், சிறுமிக்கு, 20 வயது பூர்த்தியானது போல காட்டி, தஞ்சை ஓட்டலில் வேலைக்கு சேர்த்து, கொடுமைப்படுத்தி உள்ளார். மேலும், அ.தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு நடந்த இலவச திருமண விழாவில், சிறுமியை மீண்டும் திருமணம் செய்து, சீர்வரிசை பொருட்களை பெற்றுள்ளார்.

கடந்த, 17ல், பால்ராஜுக்கும், சிலருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால், அவர்கள் கற்பழிக்க முயன்றதாக பொய் புகார் கொடுக்கும்படி, சிறுமியை பால்ராஜ் மிரட்டியுள்ளார். பொய் புகார் கொடுத்த மறுத்த சிறுமியை, அடித்து துன்புறுத்தி உள்ளார்.இதையடுத்து, வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், நேற்று முன்தினம் தஞ்சம் அடைந்த சிறுமி, பால்ராஜ் மீது புகார் அளித்தார். இதையடுத்து, 'போக்சோ' சட்டத்தில், பால்ராஜை நேற்று, போலீசார் கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X