பொது செய்தி

தமிழ்நாடு

பருவ மழை முன்னெச்சரிக்கை அதிகாரிகளுடன் ஆலோசனை

Added : மே 20, 2020
Share
Advertisement

காஞ்சிபுரம் : தென் மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம், காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா தலைமையில், நேற்று முன்தினம் நடந்தது.

இதில், காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா தெரிவித்ததாவது:பொதுப்பணி, ஊரக வளர்ச்சி, நெடுஞ்சாலை, பேரூராட்சித் துறை ஆகியவற்றின் மூலமாக நடைபெறும் முக்கிய பணிகளான மழை நீர் வடிகால் அமைத்தல், விரிவுபடுத்துதல், உபரிநீர் கால்வாய்கள், நீர்வரத்து கால்வாய்களை துார் வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.ஏரி, குளங்களில் நீர் ஏற்றம் இருந்தால், ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

நீர் நிலைகளில் உள்ள குப்பையை அகற்ற வேண்டும்.மழைக்காலங்களில், தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழை நீரை அகற்றுவதற்கான முன் நடவடிக்கைகளை மேற்கொள்ள, அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) நாராயணன் மற்றும் அனைத்துத் துறையை சார்ந்த உயர் அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X