இந்தியா

சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தினால் மட்டுமே, வருவாயை பெருக்க முடியும் 'கவர்னர் கிரண்பேடி கருத்து

Added : மே 20, 2020
Share
Advertisement

புதுச்சேரி;புதுச்சேரியில்கலால் மற்றும் நகராட்சி சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தினால் மட்டுமே, வருவாயை பெருக்க முடியும் என கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் விடுத்துள்ள பதிவு:புதுச்சேரி மாநிலத்திற்கு முறையாக கிடைக்க வேண்டிய வருவாய்கிடைக்கவில்லை. இதனால், மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் தடைபடுகிறது.தற்போது, வேறு வழியே இல்லாமல், புதுச்சேரி அரசு தனக்கு உரிய வருவாயை பெருக்கி கொள்ளஅதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. ஈடுபட்டே ஆக வேண்டும். கொரோனா பாதிப்பிற்கு பின் பழைய நிலையில் வியாபாரம்இருக்க சாத்திய கூறுகள் குறைவு. எனவே, அரசு தனதுவருவாயை பெருக்க, வராக்கடன், வரி நிலுவை போன்றவற்றைவசூலித்தாக வேண்டும்.புதுச்சேரி அரசு தற்போது கடைசி முயற்சியாக தனது வருவாயை பெருக்கும் விஷயத்தில் இறங்கி உள்ளது. மதுபான உரிமங்கள் வழங்கும் முறைகள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.கள்ளு, சாராய கடைகள் ஏலம் விடப்படுவது போல், மதுக்கடைகளையும் ஏலம் விட வேண்டும். இதன் மூலமாக வருவாயைபெருக்கிட முடியும். பொது தணிக்கை குழு, கலால் மற்றும் பிற துறைகளில் நடந்த முறைகேடுகளை சுட்டிக் காட்டி ஆட்சேபனை தெரிவித்துள்ளது. நமது செயல்பாடுகளை அடிக்கடி சுய பரிசோதித்து செய்து கொண்டால், குறைபாடுகளை நிவர்த்தி செய்து வருவாயை பெருக்கி கொள்ளலாம். இப்படி ஈட்டும் வருவாயை கொண்டு,மக்கள் நல திட்டங்களுக்கு,தாராளமாக செலவு செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X