காய்கறிகளை பதப்படுத்தி மதிப்பு கூட்டி விற்கலாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காய்கறிகளை பதப்படுத்தி மதிப்பு கூட்டி விற்கலாம்

Added : மே 20, 2020
Share

காய்கறிகளை பதப்படுத்துவது குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலைய இணை பேராசிரியை முனைவர் விமலா கூறியதாவது:காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், நெல்லுக்கு அடுத்தபடியாக, காய்கறி மற்றும் கொடி வகை காய்கறிகளை, விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர்.

ஊரடங்கு காலத்தில், சாகுபடி செய்த பல வித காய்கறிகள், விற்பனை செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது. சிலர், செடிகளில் காய்களை பறிக்காமல் விட்டுவிடுகின்றனர். இதனால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. இதை தவிர்க்க, காய்கறி பதப்படுத்தி, மதிப்பு கூட்டிய பொருளாக தயாரித்து விற்பனை செய்யலாம்.

உதாரணமாக, கத்திரி, வெண்டை, கொத்தவரை, மிளகாய் ஆகிய காய்களை சுத்தப்படுத்தி, தேவையான அளவிற்கு வெட்டி, உப்பு, மிளகாய் சேர்த்து லேசாக வேகவைத்து, உலர்த்திய வத்தலாக மாற்றி, விற்பனை செய்யலாம்.அதேபோல், கீரை வகைகளை சுத்தம் செய்து, நிழலில் உலர்த்தி, பொடியாக மாற்றி விற்கலாம். பாகற்காய், கத்திரி, வெண்டை, கொத்தவரை ஆகிய காய்கறிகளை, ஊறுகாயாக தயாரித்து விற்றால், வருவாய் கிடைக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

தொடர்புக்கு: 99942 83960

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X