இந்தியா

பி.ஆர்.டி.சி., டவுன் பஸ்கள் இன்று முதல் இயங்கும்

Added : மே 20, 2020
Share
Advertisement

புதுச்சேரி; புதுச்சேரியில் பி.ஆர்.டி.சி டவுன் பஸ்கள் இன்று முதல் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரியில் உள்ளூர் பஸ்கள், சமூக இடைவெளியுடன் இயக்கப்படும் என நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று பஸ்கள் இயக்கப்படவில்லை. இந்நிலையில், பி.ஆர்.டி.சி. நிர்வாகம் இன்று 20 ம் தேதி முதல் உள்ளூர் நகர பஸ்களை இயக்க ஏற்பாடு செய்துள்ளது.முதற்கட்டமாக புதுச்சேரி - கோரிமேடு; ரயில் நிலையம் - கோரிமேடு; புதுச்சேரி - நல்லவாடு; புதுச்சேரி- தவளக்குப்பம்- டி.என்.பாளையம் - வில்லியனுார்; புதுச்சேரி - முருங்கப்பாக்கம் - வில்லியனுார் - பத்துக்கண்ணு - புதுச்சேரி ஆகிய 5 வழித்தடங்களில் இன்று காலை 7:00 மணி முதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.இந்த பஸ்கள் ஒவ்வொரு முறை இயக்கும்போது, கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்து, டிரைவர் கண்டக்டர்கள் மாஸ்க் அணிந்து பணியாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பஸ்சில் சமூக இடைவெளி பின்பற்றி பயணிகள் அமர இருக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இரவு 7:00 மணி வரை மட்டுமே இந்த பஸ்கள் இயக்கப்பட உள்ளது. பஸ் கட்டணத்தில் எந்தவித மாற்றம் செய்யப்படவில்லை. பழைய கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நாளை முதல் இடை நில்லா பஸ்: புதுச்சேரியில் இருந்து கடலுார் வழியாக காரைக்காலுக்கு இடைநில்லா பஸ்கள் இயக்கப்படும் என முதல்வர் நேற்று முன்தினம் அறிவித்தார். அதனையொட்டி, கலெக்டர் அருண், காரைக்காலுக்கு இடைநில்லா பஸ்கள் இயக்க கடலுார் மற்றும் நாகை மாவட்ட கலெக்டர்களிடம் அனுமதி கோரினார்.அதனையேற்று இரு மாவட்ட கலெக்டர்களும், புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு செல்லும் இடைநில்லா பஸ்கள், கடலுார் மற்றும் நாகை மாவட்டங்களில் எந்த இடத்திலும் பயணிகளை ஏற்றவோ, இறக்கவோ கூடாது என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளனர். அதனையொட்டி பி.ஆர்.டி.சி., நிர்வாகம் சார்பில் நாளை 21ம் தேதி முதல் காரைக்காலுக்கு இடைநில்லா பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்துள்ளது.நாளை காலை 6:00 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்படும் பஸ் காலை 9:00 மணிக்கு காரைக்காலை அடைகிறது.அங்கிருந்து பகல் 12:00 மணிக்கு புறப்படும் பஸ் மாலை 4:00 மணிக்கு புதுச்சேரி வருகிறது. பயணிகள் எண்ணிக்கையை பொருத்து கூடுதல் பஸ்கள் இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X