இந்தியா

டில்லியில் இருந்து திரும்பியவர்களுக்கு பரிசோதனை

Added : மே 20, 2020
Share
Advertisement

புதுச்சேரி;டில்லி, ஐதராபாத் மற்றும் வெளி நாடுகளில் இருந்து புதுச்சேரி திரும்பி உள்ள 22 பேர், அரசு மருத்துவமனையில் தனிமைபடுத்தப்பட்டு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.டில்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற பலர் ஏற்கனவே புதுச்சேரி திரும்பி விட்டனர். கொரோனா ஊரடங்கு நடவடிக்கையால் அங்கேயே தங்கி இருந்த புதுச்சேரியை சேர்ந்த 9 பேர், காரைக்காலை சேர்ந்த 2 பேர், தற்போது புதுச்சேரி திரும்பி உள்ளனர்.இதே போல், ஐதராபாத்தில் தங்கியிருந்த 7 மாணவர்களும், அபுதாபி, துபாய் போன்ற அரபு நாடுகளில் இருந்த 4 பேரும் புதுச்சேரிக்கு வந்துள்ளனர்.இவர்கள் அனைவரையும், கதிர்காமம் அரசு மருத் துவமனையில் தனிமைப்படுத்தி, சுகாதாரத் துறையினர் கண்காணித்து வருகின்றனர். அனைவருக்கும், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.கொரோனா பாதிப்பு உறுதியானால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். தொற்று இல்லாதவர்களை மருத்துவமனையிலேயே தனிமைப்படுத்துவதா அல்லது அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்துவதா என சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசித்து முடிவு செய்ய உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X